தாமரைப்பாதனே......
பல்லவி
தாமரைப் பாதனே ஶ்ரீ ரகு ராமா உன்
நாமமொன்றே போதும் நலமனைத்தும் பெற
அனுபல்லவி
வாமனனாய் வந்து மூவடியாலுலகளந்த
கோமகனே கேசவனே கோசலராமனே
சரணம்
பாமரர் பண்டிதர் ஞானியர் யோகியர்
பூமியிலனைவருக்கும் துதித்திட உகந்தது
சாம முதல் வேதங்களின் சாரமாய்த் திகழ்ந்திடும்
நாமமுனதன்றி வேறில்லை ஜெயராமா
No comments:
Post a Comment