ஶ்ரீ மகாகணபதியை .....
பல்லவி
ஶ்ரீமகாகணபதியை அனுதினம் துதித்தேன்
இகபரமிரண்டிலும் சுகம் பெற வேண்டி
துரிதம்
இந்திராதி தேவரும் சனகாதி முனிவரும்
நந்தியும் கணங்களும் பணிவுடன் வணங்கிடும்
அனுபல்லவி
பாமர ஜனங்களை பாலித்தருள்பவன்
உமாசுதன் இடர்கள் களைந்திடும் கரிமுகன்
சரணம்
அரசமரத்தடியில் முச்சந்தி மூலையில்
எளிமையுடன் வீற்றிருக்கும் வலிமைமிகு கடவுளை
கரங்களில் மோதகமும் பாசாங்குசமுமேந்தி
வரங்களை அளித்திடும் கேசவன் நேசனை
No comments:
Post a Comment