வயலாளி மணவாளனை...
பல்லவி
வயலாளி மணவாளனைக் கல்யாண ரங்கநாதனை
துயரிடர் நீங்கிட மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
அயனரன் அனுமன் கருடன் நாரதர்
நயமுடன் அனுதினம் விரும்பித் துதித்திடும்
சரணம்
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தி
பொங்கும் கருணையுடன் எங்கும் நிறைந்திருக்கும்
பங்கய பதத்தானை செங்கண் மாலை
மங்கை அம்ருதவல்லி மனங்கவர் கேசவனை
No comments:
Post a Comment