இனி வேறு.....
இனி வேறு தெய்வம் எனக்கில்லை ராமா
கனி நீயிருக்க காயெதற்கு இன்னும்
அனுபல்லவி
மனிதனாயவதரித்து வாழும் நெறி காட்டிய
புனிதனே கேசவா ஆதவகுலத்தோனே
சரணம்
தனியொருவனாய் நின்று அரக்கர் குலமழித்து
முனிவர்கள் வேள்வி காத்த ஶ்ரீஜயராமா
வனிதை அகலிகையின் சாபம் தீர்த்தவனே
இனிய சங்கீத கலைகளின் ரசிகனே
அனுமனுக்கு அருள் செய்த ரகுகுல ராமா
சனியின் சகோதரன் சுக்ரீவன் தோழனே
வினதையின் புதல்வனை வாகனமாய்க் கொண்டவனே
பனிமலை நாதனைப் பணிந்த ராகவனே
No comments:
Post a Comment