பலவிதமாயென்னை.....
பல்லவி
பலவிதமாயென்னைப் பாட வைத்தாய் ராமா
உலகிலே உனையன்றி வேறு தெய்வமில்லை
அனுபல்லவி
நலம் தரும் கேசவனே கலியுக க்கடவுளே
நிலவைப் பழிக்கும் முகமுடைய அழகனே
சரணம்
எளிதிலனைவரும் உன்னருள் பெறவே
சுலபமாய் ராம நாமம் சொன்னால் போதும்
தலங்களுள் சிறந்த அயோத்தி மாநகரில்
சிலைவடிவாய் நின்று அருள்தரும் தேவனே
No comments:
Post a Comment