இந்தின்......
பல்லவி
இந்தின் இளம் பிறை சூடிய சிவனை
சந்திரசேகரனை மனமாரப் பணிந்தேன்
துரிதம்
இந்திரன் இமையோர் சந்திரன் சூரியன்
கந்தன் கணபதி நந்தியும் தொழுதிடும்
அனுபல்லவி
சந்தக்கவியரசன் அருணகிரிநாதரும்
சமயக்குரவர் சம்பந்தரும் போற்றும்
சரணம்
அருள் தரும் முகங்கள் மூன்றுடன் தோன்றி
பெருங்கருணையுடன் உலகினைக் காக்க
திருவக்கரையெனும் பதிதனில் நின்ற
கருணாகரனைக் கேசவன் நேசனை
No comments:
Post a Comment