வினாயகன்.....
பல்லவி
வினாயகன் விரும்பும் அன்னையே சங்கரி
தினமுனைத் துதித்தேன் எனைக்காத்தருள்வாய்
அனுபல்லவி
கனாவிலும் உன்றன் கழலடி மறவேன்
கருணைக் கடலே கேசவன் சோதரி
சரணம்
கலைமகள் அலைமகள் போற்றும் தாயே
உலகுயிரனைத்தையும் படைத்தவள் நீயே
அலகிலா விளையாடல் புரிந்திடும் மாயே
நலம் தரும் ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment