தருணமிதுவே
பல்லவி
தருணமிதுவே குருவாயூரப்பா
கருணைவைத்தெனையே காத்தருள்வாய்
அனுபல்லவி
இருவினைப்பயன்களால் பூமியில் உழன்று
வருந்தி வாழ்ந்திடும் நிலைமாறச் செய்து
சரணம்
பொருள் புகழ் போகம் எதுவும் வேண்டேன்
ஒரு நாளுமுந்தன் திருவடி மறவேன்
கருநீலவண்ணனே கண்ணனே கேசவா
திருவுளமிரங்கி இனிது ஆட்கொள்ள
No comments:
Post a Comment