கருடாழ்வார்
பல்லவி
வினதையின் புதல்வனைப் பறவையரசனை
மறையுருவானவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தனம் தரும் திருமகளைத் தன் மார்பில் தாங்கும்
அனந்தசயனனின் வாகனமானவனை
சரணம்
அனைவரும் அன்புடன் புள்ளரையன் காகேந்திரன்
பெரிய திருவடி என்றழைத்துப் போற்றும்
இனிய நாமங்கள் பலப்பல உடையவனை
தினம் தினம் கேசவனைத் தோளில் சுமப்பவனை
(Inspired by follwing posting of Ms.INDRA SRINIVANAN)
கருடன் வேதமயமானவன், அதாவது "வேத சொரூபன்".விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி. "ஸ்தோமம்" என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்மஸ்வரூபம்.
"காயத்ரம்" என்கிற ஸாமம் அவருக்கு கண்கள். "த்ரிவ்ருத்" என்ற ஸாமம் அவருக்கு சிரசு. யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள். சந்தஸ்ஸுக்கள் அவரது திருக்கரங்கள். "திஷ்ண்யம்" எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
"வாமதேவ்யம்" என்கிற ஸாமம் அவரது திருமேனி, "ப்ருஹத்" , "ரதந்தரம்" என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
"யஜ்ஞாயஜ்ஞியம்" என்கிற ஸாமம் அவருக்கு வால். இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால் கருடனை"வேதஸ்வரூபன்" என்கிறார்கள் பெரியோர்.
இவ்வாறு பெரிய திருவடி என்றும் புள்ளரையன் என்றும் காகேந்திரன் என்றும் போற்றப்படும் பக்ஷிராஜனான கருடன் மேல் பெருமாள் ஆரோகணித்து பவனி வரும்போது நாம் காண்பது என்ன?
கருட வேதசொரூபி. எம்பெருமான் அவ்வேதத்தினால் அறியப்படுபவன், போற்றப்படுபவன், எனவே பெருமாள் கருட சேவை தந்து எழுந்தருளும் பொது"மறை போற்றும் இறை" இவனே என்றும். "மறைமுடி"இவனே என்றும் காட்டித்தருகின்றது.
அந்த வேதச்செழும் பொருளை நாம் உணர்ந்தால் நமக்கு மோட்சம் தானே எனவே தான் கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.
கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்.
விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே
கட்டி இருக்கும்.
10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்
என்பர்.
கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்
கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது.
அதில் மிக முக்கிமானது காஞ்சி கருட சேவை. இதுவரை சேவிகாதவர்கள்
வைகாசி மாதத்தில் சேவிக்க அவன் அருளை கோரவும்
அதே போல் கல் கருட சேவை (நாச்சியார் கோயிலில் ) மிகவும் முக்கியம்.
அந்த கல் கருடன் உடம்பில் 9 பாம்புகள் இருக்கும். இது நவக்ரிஹ் தோஷத்தை போக்கவே.
கருடனை ஏள பண்ணும் போது முதலில் 4 அர்ச்சகர்கள் தான் வெளியே கொண்டுவருவர்
அடுத்த படிக்கு 8 .
இது போல் கடைசி படிக்கு வரும் போது 64 பேர் தூக்க வேண்டும் .
இதே போல் சன்னதிக்கு திரும்ப செல்லும் வரை.
64 இல் ஆரம்பித்து 4 பேரோடு முடியும். என்னே அவனது மகிமை.
கருடனுக்கு 9 பெயர் உண்டு. அவை 1 .கருத்மான் 2 கருட்: 3 தர்கஷ்ய:
4 வைனதேயன் 5 .ககேச்வர: 6 .நாகந்த: 7 .விஷ்ணுரத 8 .பன்னகாச: 9 சுபர்ண:
திருபேர் என்ற திவ்ய தேசத்தில் சிறிது நகர்ந்து இருப்பார்.
திருகண்ண மங்கை திவ்ய தேசத்தில் கட்டம் போட்ட புடவை சாத்திகொண்டு
இருப்பார்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேசத்தில் ரங்கமன்னார் உடன் இடது பக்கத்தில்
நின்ற திருகோலத்தில் இருப்பார். வேறு எங்கும் இதுமாதிரி பார்க்க முடியாது.
கருடனுக்கும் ஆதி சேஷனுக்கும் சண்டை ஏற்பட்டது.
நான் பெரியவனா நீ
பெரியவனா என்று. அதை தீர்த்து வைக்கவே திரு சிறுபுலியூர் என்கிற திவ்ய
தேசத்தில் சலசயனபெருமாள் ஆதிசேஷனை தன் ஆசனமாக ஆக்கி கொண்டார்.
கருடனும் தன் பலத்தை தவறாக எண்ணியதை மறந்து உணர்ந்தார்.
இங்கு
கருட சன்னதி சிறுது கீழும் ஆதி சேஷன் சன்னதி சற்று உயர்ந்தும் காணப்படும்
No comments:
Post a Comment