டைம்பாஸ் கவிதை!!
சும்மா கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தேன்
அம்மா என்ன செய்வதென்றறியாமல்
இம்மாநிலத்தில் பலரும் அவ்வாறே
கம்மென்றிருக்க முடியாத போதெல்லாம்
இம்மாதிரிப் பல கவிதைகளை எழுதிக்குவிக்க
நம்ம முகநூல் குழுக்களெல்லாம்
தம்மாலான ஊக்கம் ஆக்கம் தந்து
செம்மையாக பல விருப்பங்கள் தரக்கண்டு
எம்மாலான கவித்தொண்டு செய்தேன்!
No comments:
Post a Comment