வேண்டினேன் பாண்டுரங்கனை
பல்லவி
பாண்டுரங்கா உன்னை வேண்டி நின்றேன்
மீண்டும் பிறவா வரம் தரக் கோரியே
அனுபல்லவி
மீண்டும் தவறிப் பிறந்தாலும் ஆண்டவனே
வேண்டும் உன்னை மறவா மனமென்று
சரணம்
பாண்டவர்நேசனே பரம தயாளனே
காண்டவ வனமழித்த கார்மேகவண்ணனே
வேண்டுவோர் வேண்டும் வரம்தரும் கேசவா
தீண்டுமரவின் மேல் பள்ளி கொண்டிருப்பவனே
No comments:
Post a Comment