பண்டரீபுரத்தரசன்
பல்லவி
பண்டரீபுரத்தரசே பாண்டுரங்கா உன்னை
தண்டனிட்டு பணிந்தேன் அருள்புரிவாய்
அனுபல்லவி
கண்டவர் மனங்கவரும் பேரழகா கண்ணா
புண்டரீகாக்ஷனே கோவிந்தா
சரணம்
விண்ணாளுமிந்திரரும் தேவரும் முனிவரும்
அண்ணாந்து பார்த்து கைகூப்பித்தொழுதிடும்
மண்ணையுண்ட வாயனே கேசவா மாதவா
அண்டசராசரங்களனைத்தையும் காப்பவனே
No comments:
Post a Comment