பரமபத நாதன்
பல்லவி
ஆர்ப்பரிக்கும் கடல் நடுவே பள்ளிகொண்டிருக்கும்
கார்வண்ணன் கேசவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பார்த்தனுக்குத் துணைநின்று தேரினை நடத்திய
பார்த்தசாரதியை பாற்கடல் வாசனை
சரணம்
மார்பில் திருமகளை வைத்திருக்கும் மாதவனை
நீர்மலைமேல் நின்றருளும் நீர்வண்ணப்பெருமாளை
நாற்கவிகள் புகழ்ந்தேத்தும் சாரங்கபாணியை
பார் போற்றும் திருமாலைப் பரமபத நாதனை
No comments:
Post a Comment