தூபமடி நீயெனக்கு!
பாபங்கள் போக்கி பவபயம் நீக்கி
ஆபத்திருளை அகற்றிடும் அன்னையே
தீபமாய் சோதியாய் என் வாழ்வில் விளங்கிடும்
தூபமடி நீயெனக்கு
சோபையுடன் காட்சி தரும் மங்கலமே
கோபம் விலக்கி குணம் தர வேண்டினேன்
மாபலியை வென்ற கேசவன் சோதரி
காபந்து செய்தெனைக் காத்தருள்வாயே
No comments:
Post a Comment