சரணம் கேசவா
பல்லவி
சரணகமலமே சரணம் கேசவா
வரம் தரும் உனதிரு அழகிய திருவடி
அனுபல்லவி
கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திடும்
பரந்தாமனே பாற்கடல் வாசனே
சரணம்
அரவிந்தநாபனே அமரரும் முனிவரும்
பிரமனும் இந்திரனும் கரம்பணிந்தேத்தும்
பரம புருஷனே பக்த வத்சலா
மரணம் பிறப்பெனும் மாயையகன்றிட
No comments:
Post a Comment