பஞ்சவடி கபாலீசன்
பல்லவி
நஞ்சினை நெஞ்சில் வைத்த கபாலீசனை
பஞ்சவடித் தலத்தில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
தஞ்சமடைந்தோரைக் காத்தருளும் சிவனை
பஞ்சநதீசனைப் பரமேச்வரனை
சரணம்
நஞ்சரவம் தன்னைக் கழுத்திலணிந்த
செஞ்சடாதரனை மருந்தீச்வரனை
அஞ்சலஞ்சேலென்று அபயகரம் நீட்டும்
அஞ்செழுத்தீசனைக் கேசவன்நேசனை
No comments:
Post a Comment