தீபாவளி
தன்னந்தனியாக நிற்கும்
கன்னங்கரிய இந்த
சின்னஞ்சிறிய சிறுவன்
தீபாவளியை விரும்பவில்லை
சின்னஞ்சிறார்கள்
தொழில் செய்வதாலோ
சுற்றுச்சூழல்கள்
கெட்டுப் போவதாலோ
பட்டாசு துணிமணிகள்
இனிப்பு பலகாரங்கள்
விலையேறிவிட்டதாலோ
சீனப்பட்டாசுகள்
கள்ளச்சந்தையில்
விற்பனை ஆவதாலோ
அல்லவென்றறிந்து
காரணம் கேட்டேன்
வேதனை அடைந்தேன்
சென்ற வருடம் தீபாவளியில்
யாரோ கொளுத்திய
விண்வெளி வாணம்
இவனது குடிசை
பெற்றோரை எரித்தது
*************
No comments:
Post a Comment