பாலகிருஷ்ணன்
பல்லவி
பாலகிருஷ்ணனாய் லீலைகள் புரிந்திடும் - கோ
குருவாயுரப்பனின் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
கோலமயில் பீலி கொண்டையில் சூடி
கோவர்த்தன மலையைக் குடையெனப் பிடித்து
சரணம்
பால் தயிர் வெண்ணையைத் திருடியே உண்டு
வேல் விழி கோபியர் மனங்களை வென்று
கால் வைத்துக் காளிங்கன் தலைமீது நடமாடி
மால் அவன் கேசவன் மாடுகள் மேய்த்து
No comments:
Post a Comment