சரணம் கேசவா
பல்லவி
இனி என்ன செய்தாலும் துணை நீயே
கனியே கேசவா உனைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
முனிவரும் தேவரும் பிரமனும் மற்றும்
அனைவரும் பணிந்தேத்தும் கருணைக்கடலே
சரணம்
பனியெனக்குளிர்ந்தாலும் அனலெனக்காய்ந்தாலும்
உனது மலர்ப்பதமே கதியெனத் துதித்தேன்
எனது பழவினையனைத்தையும் களைந்து
புனிதனே ஏழையேன் எனைக்காத்தருள்வாய்
பல்லவி
இனி என்ன செய்தாலும் துணை நீயே
கனியே கேசவா உனைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
முனிவரும் தேவரும் பிரமனும் மற்றும்
அனைவரும் பணிந்தேத்தும் கருணைக்கடலே
சரணம்
பனியெனக்குளிர்ந்தாலும் அனலெனக்காய்ந்தாலும்
உனது மலர்ப்பதமே கதியெனத் துதித்தேன்
எனது பழவினையனைத்தையும் களைந்து
புனிதனே ஏழையேன் எனைக்காத்தருள்வாய்
No comments:
Post a Comment