புன்னகை
புன்னகை ஒன்றே போதும் மங்கையர்க்கு
பொன்னகை ஏதும் தேவையில்லை
சின்ன இடையும் செம்பவளவாயும்
பென்னம் பெரிய முலையும் மார்பும்
கன்னங்கரிய குழலும் கருவிழியும்
மின்னும் சோபையும் வடிவான முகமும்
சின்ன விரல்களில் வண்ண நகப்பூச்சும்
பின்னும் முன்னும் பொருந்திய அழகும்
மன்னரும் விரும்பும் தேசும் பொலிவும்
கன்னல் பேச்சும் கனிவான பார்வையும்
தன்னம்பிக்கையும் தலைநிமிர்ந்த நோக்கும்
அன்னநடையமே அவர்களுக்கழகு
No comments:
Post a Comment