வக்கிரக்காளி
பல்லவி
சக்கரக்கையன் கேசவன் சோதரியை
வக்கிரக்காளியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
முக்கண்ணியை அன்னை பராசக்தியை
வக்கிர சனியும் வரதனும் போற்றும்
சரணம்
அக்கறையுடனே வணங்கிடும் அனைத்து
பக்தருக்குமருள் அளித்திடும் தேவியை
விக்கினங்கள் பவ வினைகள் போக்கி
முக்தியளித்திடும் சர்வேச்வரியை
No comments:
Post a Comment