கந்தசாமி
கந்தனை கடம்பனை வெற்றி வேலாயுதனை
இந்திரன் மகளை மணந்த முருகனை
தந்தைக்கு மந்திரம் ஓதிய தனையனை
நிந்தை புரிந்த சூரனை வதைத்தவனை
மந்திரப்பொருளான ஓங்கார வடிவை
தந்திமுகத்தோன் கணபதி இளவலை
முந்தி அவ்வைக்கு அருள் தந்த குமரனை
சந்ததம் தேவரும் முனிவரும் பிரமனும்
நந்தியும் கணங்களும் வணங்கிடும் வேலனை
சந்தக்கவி பாடிப் பரவிய குருபரனை
விந்தையாய் மயிலேறி ஞாலம் வலம் வந்த
சுந்தரனைப் பழனியை சுப்பிரமணியனை
அந்தரி நீலி சங்கரி மைந்தனை
வந்தெனை ஆதரித்தாள வேண்டுமென
வந்தனை புரிந்து மனமுருகித் துதித்தேன் .
No comments:
Post a Comment