பரமசிவன் மகன்
பல்லவி
பரமசிவன் மகனை மகாகணபதியை
கரமைந்துடையவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அரவிந்த மலரும் அங்குசமும் மோதகமும்
கரங்களிலேந்திடும் கேசவன் மருகனை
சரணம்
அரவணிந்தவனை ஆனை முகத்தோனை
சரவணன் தமையனை சதுர்மறை துதிப்பவனை
நிரந்தரமானவனை விக்ன விநாயகனை
சரணடைந்து பிறவா வரம் தர வேண்டி
No comments:
Post a Comment