கணநாயகன்
பல்லவி
இணையடி நிழலே துணையென நம்பி
கண நாயகனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
இணை தனக்கொரு தெய்வமில்லாத தேவனை
கணங்களின் அதிபதியைக் கேசவன் மருகனை
சரணம்
தணலினை நெற்றியில் வைத்திருக்கும் சிவன் மகனை
வணங்கிடும் பக்தர்களின் துயரிடர் களைபவனை
அணையிட முடியாத கருணைக் கடலினை
அணைத்தெனை ஆண்டருள வேண்டுமெனப் பணிந்து
No comments:
Post a Comment