அப்பக்குடத்தான்
பல்லவி
அப்பக்குடத்தானை அப்பால ரங்கனை
முப்போதும் வணங்கி மனமாரத்துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நாரதர் சுகசனகாதியர்
தும்பிக்கையாழ்வார் நான்முகன் வணங்கிடும்
அனுபல்லவி
எப்போதும் உடனிருக்கும் கமலவல்லி போற்றும்
ஒப்புயர்வில்லாத்திருமாலைக்கேசவனை
சரணம்
தப்பேதுமில்லாத தாமரைநாபனை
இப்பிரபஞ்சமே இனிது பணிந்திடும்
உப்பிலியப்பனை பஞ்சரங்கத்துறைபவனை
முப்பிறப்பில் யான் செய்த வினைப்பயன் தொலைந்திட
No comments:
Post a Comment