எனக்கு கவிதை பிடிக்காது
வாக்கியத்தை வார்த்தைகளாய்
வரிசையாய் ஒன்றின் கீழ் ஒன்றாக
அடுக்கி வைப்பது கவிதைஎன்றால் (எனக்கு .....)
புரியாத சொல்லெல்லாம் எதுகை மோனை
ஓசையுடன் அடுக்கடுகாய் கோர்த்தெடுத்து
படித்துப் பார்ப்பது கவிதையெனில். (எனக்கு.......)
அழகுணர்ச்சி யில்லாமல் அன்பும் எதுவுமில்லாமல்
படிப்பவர் மனதை வருடாமல்
அறிவுத் திறனே கவிதைஎன்றால் ( எனக்கு ........)
எழுதும் பொருளும் புரியாமல்
கருத்தும் தெளிவும் இல்லாமல்
வரிகளை வடிப்பது கவிதைஎன்றால் (எனக்கு .......)
No comments:
Post a Comment