அம்மா
ஃ
அம்மா உனையன்றி வேறுதுணை யாருளார்
இம்மாநிலம்போற்றும் தாயே காமாக்ஷி
பெம்மான் ஏகாம்ரேச்வரனின் பங்கிலுறைபவளே
அம்மா உன் திருநாமம் ஆயிரமும் ஓதி -- கனக
சிம்மாசனத்தில் வீற்றிருக்குமுனைப் பணிந்தேன்
அம்மான் கேசவனின் அன்பு சோதரி
சும்மாயிருந்தால் பொறுப்பெனோ இனியும்
எம்மாத்திரமுனக்கு ஏழையேன் எனக்கருள
இம்மையிலும் மறுமையிலும் எனைநீயே காத்தருள்வாய்
No comments:
Post a Comment