Wednesday, 11 June 2014

சிவபுரம் சிவன்





புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை 

திரிகுணம் அமர்நெறி

திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை 

யவைதம

பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது 

மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில


 னினில்நிலை பெறுவரே. 




காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப் பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்




பன்னிரு திருமுறைகளில் பாடல் பெற்ற திருத்தலம்
திருச்சிவபுரம்



சிவபுரம் சிவன் 

பல்லவி

சிவபுரம் சிவனை மனமாரத்துதிப்பவர் 

பவபயம் நீங்கி நலமுடன் வாழ்வார் 

அனுபல்லவி 

புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசனை 

 தவப்புதல்வர் சம்பந்தர் பாடிய 
  
சரணம் 

புவிபுனலனல் காற்று  வெளி  ஐந்துமாகி 

செவிவழி வந்த மறைகளும் மற்றும் 

அவியுண்ணு மமரரும் மலரோனும் போற்றும்

தவநெறி முனிவர் அறவோர் பணிந்திடும் 


புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே. 

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 67வது தலம்.


























No comments:

Post a Comment