Tuesday, 3 June 2014

சிவனும் கணபதியும்



   சிவனும்  கணபதியும்

   பல்லவி

  தந்தையும் தனயனும் ஒன்றாகக் காட்சிதரும்

  விந்தையைப்  போற்றி  மனமாரத்துதித்தேன்

   அனுபல்லவி

   சிந்தையிலந்த  கேசவன் நேசரை

   வந்தனை செய்து சீரடி பணிந்து

    சரணம்

     எந்தையே ஏழையேன் செய்த புண்ணியம்

     உன் தயை நாடும் பாக்கியம் தந்தனை

     முந்தய பழவினைப் பயன்கள் நீங்கிட

      சந்ததம் உந்தன் சரணமே சரணம்



No comments:

Post a Comment