சொற்றுணை வேதியன் சோதி வாணவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே!!!
ஈசன்
பல்லவி
சொல்லால் பாடி மனமாரத்துதிப்போர்க்கு
எல்லா நலன்களும் அளித்திடும் மகேசன்
அனுபல்லவி
நல்லோர் மனங்களில் என்றும் இருப்பவன்
தில்லைவாழீசன் கேசவன் நேசன்
சரணம்
அல்லலிடர் களையும் ஆலமுண்ட நீலகண்டன்
மல்லீச்வரனவன் மலர்ப்பதம் பணிந்தோரை
கல்லால் கட்டிக் கடலிலி ட்டாலும்
நல்ல துணையாவது சிவனவன் நாமமே !
No comments:
Post a Comment