ஆதி கணபதி
பல்லவி
அடைக்கலம் நீயே மகாகணபதியே
கடைக்கண்ணருள் வேண்டி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழில்
உடையவன் நீயே அனைத்துக்கும் முதல்வனே
சரணம்
இடையில் பாம்பணியும் தலையில் பிறைமதியும்
குடையலங்காரமும் கொண்ட கரிமுகனே
விடைவாகனன் மகனே கேசவன் மருகனே
தடையற அனைத்தும் நடைபெற அருள்வோனே
No comments:
Post a Comment