சும்மாயிருப்பதே சுகம்
சும்மாயிருப்பதே சுகமென்றுணர்த்திய
அம்மா உனக்கென் ஆயிரம் வந்தனங்கள்
எம்மாதிரி கவலைஇடர் வரினும் அதைத்தாங்கி ( சும்மா ••)
அம்மா உன் கணவன் குடித்துவிட்டு த்தரும்
அடி உதை தாங்கி அவன் மேலன்பு செலுத்தி (சும்மா ••)
அம்மா உன் உற்றார் உறவினர் செய்யும்
கொடுமை எல்லாம் பொறுத்து நேயமாயவரிடம் (சும்மா ••)
இம்மாநிலம் நீ செய்த சாதனைகளை வியந்து
பாராட்டி விருது கொடுத்த தருணத்திலும் கூட (சும்மா ••)
சும்மாயிருக்கும் சுகத்தை அநுபவிக்கக் கற்றுத்தந்த
அம்மா உனக்கு மகனாய் இருப்பதே என் பாக்கியம்
No comments:
Post a Comment