சிவகணபதி
பல்லவி
சிவவடிவானவனை மெய் ஞானச் சுடரை
சிவகணபதியை மனமாரத் துதித்தேன்
துரிதம்
அம்புலி கங்கை அரவு மான்மழு
உடுக்கை சூலம் அனைத்தும் ஏந்தி
அநுபல்லவி
நவகோள்களும் சிவ கணங்களும் அமரரும்
தவ யோகியரும் முனிவரும் பணிந்திடும்
சரணம்
குவலயம் காக்க அவதாரமீரைந்து
அவனியிலெடுத்த கேசவன் மருகனை
துவங்கும் கருமங்கள் தடையின்றி நடைபெற
புவியிலனைவரும் வணங்கிடும் கரிமுகனை
No comments:
Post a Comment