நவநீதேச்வரன்
பல்லவி
பவ பயம் நீக்கும் பரமேஸ்வரனை
சிவபெருமானை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நவக்கிரகங்களும் நான்மறையும் போற்றும்
நவநீதேச்வரனைக் கேசவன் நேசனை
சரணம்
கவனமுடன் வணங்கும் பக்தருக்கெல்லாம்
கவலை இடர் பிணி யகற்றிடுமீசனை
புவனம் புகழ்ந்தேத்தும் புண்ணிய மூர்த்தியை
சிவகாமேச்வரனை சிக்கலிலுறைபவனை
No comments:
Post a Comment