Friday, 6 June 2014

பயணம்





பயணம்

பாதைகள் பலவெனினும்

சேருமிடம் ஒன்றே

 செல்லும்  வழியில்

கரடு முரடு மேடு பள்ளம்  முட்கள் புதர்கள்

காடு கழனி ஒரு வழிப்பாதை ராஜபாட்டை

பலப்பல தடைகள் இடைபடக்கூடும்

இன்னும் இனிய அனுபவங்களும்

சிறிதும் பெரிதும் ஏற்படக்கூடும்

சாலையில் ஆங்கங்கே

நிழலும் கனியுமளித்திடுமழகிய

அனுபவமரங்கள் ஆதரவளித்திடும்

இளைப்பாறி த்தங்கி ஆசுவாசம் கொள்வதன்றி

நிரந்தரமாயிருப்பது சாத்தியமில்லை

வழிகள் நமக்கு வேறாயிருப்பினும்

இலக்கு ஒன்றே

பயணம் தொடர்வோம் !!

No comments:

Post a Comment