நடமிடும் விநாயகன்
பல்லவி
நடனமாடிடும் ஆனை முகத்தோனை
விடைவாகனன் மகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
விடம்கொண்ட அரவுதனை இடையிலணிந்தவனை
இடையர் குலத்துதித்த கேசவன் மருகனை
சரணம்
மடவரல்கள் சித்தி புத்தியும் மற்றும்
உடன்பிறந்தோனும் தேவரும் முனிவரும்
இடபமும் கணங்களும் கரம்பணிந்தேத்தும்
இடகுஞ்சி கணபதியை விக்ன விநாயகனை
No comments:
Post a Comment