சதுர்த்தி விநாயகன்
பல்லவி
சதுர்த்தி கொண்டாடக் காத்திருக்கும் கரிமுகனை
சதுர்முகனை உமைமகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சதுர்மறை இதிகாச புராணம் போற்றும்
மதுர பூரண மோதகக் கையனை
சரணம்
எதிலும் எங்கும் நிறைந்திருப்பவனை
துதிப்பவர்க்கருளும் தும்பிமுகப் பெருமானை
புதுப் பொலிவுடன் திகழ் மகா கணபதியை
கணபதி அக்கிரகாரம் தனிலே
No comments:
Post a Comment