Monday, 30 June 2014

ஆதி கணபதி



ஆதி கணபதி 


 பல்லவி 

 அடைக்கலம் நீயே மகாகணபதியே 

  கடைக்கண்ணருள்  வேண்டி மனமாரத் துதித்தேன் 

 அனுபல்லவி 

  படைத்தல் காத்தல்  அழித்தல் முத்தொழில் 

  உடையவன் நீயே அனைத்துக்கும் முதல்வனே 

  சரணம் 

  இடையில் பாம்பணியும் தலையில் பிறைமதியும் 

  குடையலங்காரமும் கொண்ட கரிமுகனே 

  விடைவாகனன் மகனே கேசவன் மருகனே 

   தடையற அனைத்தும் நடைபெற அருள்வோனே 

எனக்கு கவிதை பிடிக்காது






எனக்கு கவிதை பிடிக்காது 


வாக்கியத்தை வார்த்தைகளாய்

வரிசையாய் ஒன்றின் கீழ் ஒன்றாக

அடுக்கி வைப்பது கவிதைஎன்றால்    (எனக்கு .....)

புரியாத சொல்லெல்லாம் எதுகை மோனை

ஓசையுடன் அடுக்கடுகாய் கோர்த்தெடுத்து

படித்துப் பார்ப்பது கவிதையெனில்.      (எனக்கு.......)

அழகுணர்ச்சி யில்லாமல்  அன்பும் எதுவுமில்லாமல்

படிப்பவர் மனதை வருடாமல்

அறிவுத் திறனே  கவிதைஎன்றால்        ( எனக்கு ........)

எழுதும் பொருளும் புரியாமல்

கருத்தும் தெளிவும் இல்லாமல்

வரிகளை வடிப்பது கவிதைஎன்றால்      (எனக்கு .......)








விடுப்பு

விடுப்பு

தத்தா பேரனிடம் :  போடா  பேராண்டி  சீக்கிரமா  போய்  ஒளிஞ்சுக்கோ , உங்க வகுப்பு கிளாஸ் டீச்சர்  வராங்க !!!

பேரன்  :  தாத்தா சீக்கிரமா  நீ போய்  ஒளிஞ்சுக்க ; நீ  செத்துப் போயிட்டேன்னு சொல்லி தான்  லீவே  போட்டிருக்கேன் !!!

எப்பிடீ


எப்பிடீ


அக்கா :  "டேய் , தம்பி  பாட்டி பிறந்த நாளுக்கு என்னடா பிரசன்ட்  பண்ணப் போற ?"

தம்பி :   "கால் பந்து ! "

அக்கா :  "என்னடா சொல்ற , பாட்டி  கால்பந்தெல்லாம்  விளையாடமாட்டாங்களே !!"

தம்பி : "அவங்க என்னோட பிறந்த நாளுக்கு  பகவத் கீதை  புத்தகம் வாங்கித் தந்தாங்க !!"

Sunday, 29 June 2014

சும்மாயிருப்பதே சுகம்


  சும்மாயிருப்பதே சுகம் 


 சும்மாயிருப்பதே சுகமென்றுணர்த்திய

 அம்மா உனக்கென் ஆயிரம்  வந்தனங்கள்

  எம்மாதிரி கவலைஇடர் வரினும் அதைத்தாங்கி  ( சும்மா ••)

   அம்மா உன் கணவன் குடித்துவிட்டு த்தரும்

   அடி உதை தாங்கி  அவன் மேலன்பு செலுத்தி    (சும்மா ••)

   அம்மா உன் உற்றார் உறவினர்  செய்யும்

   கொடுமை எல்லாம் பொறுத்து நேயமாயவரிடம் (சும்மா ••)

   இம்மாநிலம்  நீ செய்த சாதனைகளை  வியந்து

   பாராட்டி  விருது கொடுத்த தருணத்திலும் கூட  (சும்மா ••)

    சும்மாயிருக்கும் சுகத்தை  அநுபவிக்கக் கற்றுத்தந்த     

    அம்மா  உனக்கு மகனாய் இருப்பதே என் பாக்கியம் 

அம்மா




 அம்மா 


அன்னை யுன்னையே  அம்மாவென்றழைத்தேன்  

 தென்னையைப் போல்  நீயெனக்கு  அனைத்தும் தந்தாய்

 முன்னறி தெய்வம்  உனையன்றி  யாருளார்

  தன்னையே  தந்து  நீ

  என்னை  ஆளாக்கினாய்

   உன் தயை  சொல்லவோ  வார்த்தைகளில்லை ••••••••••

நண்பர்கள்



நண்பர்கள் 


ஐந்து நண்பர்கள்   வழக்கம் போல  ஒரு இனிய மாலைப்பொழுதில் தேனீர் விடுதியில் சந்தித்தனர்

அதிலிருவர் சற்று வசதியுள்ளவர்.  அந்த இருவரிலும் பணவசதியும் மனவசதியும் உள்ள நண்பனின்

செலவில் அனைவரும் தேனீர் பருகுவது வழக்கம் .  அப்பொழுது அங்கு அவர்களின் ஆறாவது

வழக்கமான நண்பனும் வந்து சேர்ந்து கொண்டான் .  ஆறாவது நண்பன் மொக்கை போடுவதில்

மிகவும் வல்லவன் . மொக்கைத்திலகம், அறுவை மன்னன் , ரம்பம் என்று பல பட்டப்பெயர்களை

வாங்கியவன் .  வந்ததுமே  " மச்சி  இன்னும்  டீ  சொல்லலையா ",  "மாஸ்டர்  எனக்கும் சேர்த்து ஆறு

டீ ,"என்று  குரல் கொடுத்தான் .  தேநீர்  வந்ததும் எல்லோரும் பருக ஆரம்பித்த்தனர்.  உடனேயே

ஆறாவது நண்பன் ஆரம்பித்தான் ' மச்சி  நீ கேளேன் , என்று !!  ஒவ்வொருவராக  நண்பர்கள்

ஏதேதோ  சாக்கு  சொல்லி  இடத்தை காலி  செய்தனர்!!!


மொக்கை  நண்பன் தனக்குத்  தானே சொல்லிக்கொண்டான் . "போங்கடா  போங்க  நீங்க

இல்லாட்டி என்ன   எனக்கு  என்னோட  பேஸ் புக்  இருக்கு அங்க போஸ்ட் பண்ணிக்குறேன் !!"

இங்கதான்    ஏதோ  குருப்ல  இருக்காப்ல . என்ன  என்ன  என்னை ஒரு மாதிரி பாக்குறீங்க !!!




பேஸ் புக்

பேஸ் புக் 


" அண்ணே புதுசா  பேஸ் புக்ல  ஒரு க்ரூப்ல  சேர்ந்துருக்கேன் . என்ன போஸ்ட் போடறதுன்னு தெரியல்லே !  என்ன போடணும்னு  கொஞ்சம் யோசனை சொல்லுங்களேன் ".


" அட , அது ரொம்ப ஈசிங்க . சும்மா காலைல ஒரு பூவோ பொம்பளப் புள்ள படமோ போட்டுக்
காலை வணக்கம்னு போடுங்க !   மதியம் ஒரு  சாப்பாடு போட்டோ போட்டு  மதிய வணக்கம் ன்னு போடுங்க . சாயங்காலம்  காப்பி இல்லேனா  தேனீர்  படம் போட்டு  மாலை வணக்கம் போஸ்ட் பண்ணுங்க.நைட்டு  தூங்கற புள்ள இல்லாட்டி டக்கரா  ஒரு பொண்ணோட படம் போட்டு
இரவு வணக்கம் இனிமைக்கனவுனு போஸ்ட் போடுங்க !!!  நடுவுல  பாக்கற த்துக்கெல்லாம்  லைக் ,
லைக்னு  போடுங்க !! அவ்ளோதான்  

சச்சிதானந்தன்


சச்சிதானந்தன் 



பல்லவி

முத்தமிழ்ச் சங்க முதல்வனை சிவனை

நித்தம் போற்றி  மனமாரத்துதிதேன்

அனுபல்லவி

பத்தவதாரம் செய்த கேசவன் நேசனை

எத்திசையும் புகழ் விளங்கும் சச்சிதானந்தனை

சரணம்

அத்தன் அரனென்னும் அவன்தாளைப்பற்றி

பித்தனவன் மேல் பித்தாகி நின்று

சித்தம் முழுதுமந்த உத்தமனை இருத்தி

மொத்தமுமிப்புவியில் சிவனவனே  என்று 

சிவகணபதி


சிவகணபதி 



பல்லவி 

சிவவடிவானவனை மெய் ஞானச் சுடரை 

சிவகணபதியை  மனமாரத் துதித்தேன் 

துரிதம் 

அம்புலி கங்கை அரவு மான்மழு 

உடுக்கை சூலம் அனைத்தும்  ஏந்தி 

அநுபல்லவி 

நவகோள்களும் சிவ கணங்களும் அமரரும் 

 தவ யோகியரும் முனிவரும் பணிந்திடும் 

சரணம் 

குவலயம் காக்க அவதாரமீரைந்து 

அவனியிலெடுத்த கேசவன் மருகனை 

துவங்கும் கருமங்கள் தடையின்றி நடைபெற 

புவியிலனைவரும் வணங்கிடும் கரிமுகனை 

Saturday, 28 June 2014

அருள்தரும் கணபதி







அருள்தரும்  கணபதி 


பல்லவி

அருள் தரும் கணபதியை அனுதினம் துதித்தேன்

பொருள் புகழ் போகமனைத்தையுமளித்திடும்

துரிதம்

முருகனும் நந்தியும் தேவரும்  கணங்களும்

 அருந்தவ முனிவரும் கரம் பணிந்தேத்தும்

அனுபல்லவி

வருமிடர் தவிர்த்திடும் வாரண முகனை

திருத்தங்கும் மணிமார்பன் கேசவன் மருகனை

சரணம்

 குருவருளும் திருவருளும் பணிபவர்க்களித்திடும்

 கருணைக் கடலை  ஆனைமுகத்தோனை

 கருமங்கள் தொடங்கும் முன் அனைவரும் வணங்கிடும்

 பெருமைக்குரிய வேழமுகத்தோனை


கணநாயகன்


கணநாயகன் 


பல்லவி

இணையடி நிழலே துணையென நம்பி

கண நாயகனை  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

இணை தனக்கொரு தெய்வமில்லாத தேவனை

கணங்களின் அதிபதியைக்  கேசவன் மருகனை

சரணம்

 தணலினை நெற்றியில் வைத்திருக்கும் சிவன் மகனை

 வணங்கிடும் பக்தர்களின் துயரிடர் களைபவனை

 அணையிட முடியாத  கருணைக் கடலினை

  அணைத்தெனை ஆண்டருள வேண்டுமெனப் பணிந்து







வஞ்சுளவல்லி


வஞ்சுளவல்லி

பல்லவி

அஞ்சேலென்று  அபயகரம் காட்டும்

வஞ்சுளவல்லியைத் தஞ்சமடைந்தேன்

அனுபல்லவி

நஞ்சரவணை தனில் துஞ்சிடும் கேசவன்

நெஞ்சினில் வீற்றிருக்கும் நம்பிக்கை நாச்சியாரை

சரணம்

அஞ்சுவித அடையாளம் அடியார்க்கருளிய

கஞ்சனைக்காய்ந்தவனை கரம் பிடித்த மங்கையை

நஞ்சுண்டன் நாயகியும் கலைமகளும் கருடனும்

நெஞ்சாரப் போற்றும் ஸ்ரீ மகா லக்ஷ்மியை







Friday, 27 June 2014

ஸ்ரீ பத்மாவதி






ஸ்ரீ பத்மாவதி

பல்லவி

பத்மாவதியை  மனமாரத் துதித்தேன்

 பற்றறுத்திடவும் பரகதி பெறவும்

அனுபல்லவி

 சத்தியகிரினாதன் திருவேங்கடமுடையானின்

 உத்தமமான மணிமார்பில் வீற்றிருக்கும்

சரணம்

நித்தியம் துதித்திடும் பக்தருக்கருள் தரும்

உத்தமியைத் திருமகளை கேசவன் துணைவியை

வித்தையும் செல்வமும் அனைத்துமளித்திடும்

எத்திசையும் புகழ் விளங்கும் மகாலக்ஷ்மியை


அப்பக்குடத்தான்





அப்பக்குடத்தான்

 பல்லவி

அப்பக்குடத்தானை அப்பால ரங்கனை

முப்போதும் வணங்கி மனமாரத்துதித்தேன்

துரிதம்

நரர்சுரர் நாரதர் சுகசனகாதியர்

தும்பிக்கையாழ்வார்  நான்முகன் வணங்கிடும்

அனுபல்லவி

எப்போதும் உடனிருக்கும் கமலவல்லி போற்றும்

ஒப்புயர்வில்லாத்திருமாலைக்கேசவனை

சரணம்

தப்பேதுமில்லாத தாமரைநாபனை

இப்பிரபஞ்சமே இனிது பணிந்திடும்

உப்பிலியப்பனை  பஞ்சரங்கத்துறைபவனை

முப்பிறப்பில் யான் செய்த வினைப்பயன் தொலைந்திட

நவநீதேச்வரன்



நவநீதேச்வரன்

பல்லவி

பவ பயம் நீக்கும் பரமேஸ்வரனை

சிவபெருமானை  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

நவக்கிரகங்களும்  நான்மறையும் போற்றும்

நவநீதேச்வரனைக்  கேசவன் நேசனை

சரணம்

கவனமுடன் வணங்கும் பக்தருக்கெல்லாம்

கவலை இடர் பிணி யகற்றிடுமீசனை

புவனம் புகழ்ந்தேத்தும் புண்ணிய மூர்த்தியை

சிவகாமேச்வரனை சிக்கலிலுறைபவனை


Dhenupurisvaran




தேனுபுரீச்வரன்

பல்லவி

 தேனுபுரீச்வரனை  மகாதேவனை

  பட்டீஸ்வரம் தனில் மனமாரத்துதித்தேன்

 அனுபல்லவி

 ஆநிரை மேய்த்திடும் கேசவன் நேசனை

 கூனல் பிறையணிந்த  உமையொரு பாகனை


சரணம்

 வானுறை தேவரும் நந்தியும் நான்முகனும்

 பானுவும் சந்திரனும்  ஞானம்பிகையும்

 தேனுவின் மகளும் துர்க்கையும் கணங்களும்

 ஞான சம்மந்தரும் போற்றி வணங்கிடும் 

Ananda ganapathi

Sri Anandha Mahaganapati decorated with flowers during the kumbabhishekam of the temple situated on the banks of the River Cauvery at Umayalpuram, Thanjavur District

 
 ஸ்ரீ ஆனந்த மகா கணபதி 

பல்லவி 
 ஆனந்த கணபதியை  மனமாரத்துதித்தேன் 
தானந்தமில்லாத தனிப்பெருங்கடவுளை 
அனுபல்லவி 
வானவர் தானவர் நந்தியும் கணங்களும்
மோனத் தவம் செய்யும்  முனிவரும் வணங்கிடும் 
சரணம் 
ஆநிரை மேய்க்கும் கேசவன் மருகனை 
தேனார் மொழியாள் மலைமகள் மைந்தனை 
ஞானப்பழம் வென்ற வாரண முகத்தோனை 
தீனசரண்யனை  உமையாள்புரம் தலத்தில் 







Thursday, 26 June 2014

Selvambikai





செல்வாம்பிகை 



பல்லவி

செல்வம் புகழ் கல்வி நல்வாழ்வு அளித்திடும்

செல்வாம்பிகையை  மனமாரத்துதித்தேன்

துரிதம்

அமரரும் முனிவரும் அமரேந்திரனும்

நாரதரும் நான்முகனும் கரம் பணிந்தேத்தும்

அனுபல்லவி

 சொல்லற்கரிதான பேரழகுடையவளை

 நல்லதொரு பாற்கடலில் தோன்றிய திருமகளை

 சரணம்

  வல்லரக்கர் குலமழித்த கேசவன் நாயகியை

  வல்வினை துயர் களையும் வான்புகழ் அலைமகளை

  இல்லாமை இல்லாமல் செய்திடும் புவிமகளை

  எல்லா நலன்களும் எனக்கருள வேண்டியே 

Marunthisvaran




 மருந்தீச்வரன் 


பல்லவி

அண்டசராசரங்களனைத்தையும் படைத்தவனை

நஞ்சுண்ட கண்டனை மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

  பண்டரி நாதன் கேசவன் நேசனை

  தண்மதி பிறைதனை சூடிய ஈசனை

சரணம்

 வண்டார்குழலி உமையவள் நாதனை

 வண்டமர் சோலை சூழ் மருந்தீச்வரனை

 கண்கவரழகனை  வேதபுரீச்வரனை

 தொண்டருக்கருள்பவனை  சிவபெருமானை



Paramasivan makan




 பரமசிவன் மகன் 


  பல்லவி

பரமசிவன் மகனை மகாகணபதியை

கரமைந்துடையவனை  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

அரவிந்த மலரும்  அங்குசமும் மோதகமும்

கரங்களிலேந்திடும் கேசவன் மருகனை

சரணம்

 அரவணிந்தவனை  ஆனை முகத்தோனை

 சரவணன் தமையனை  சதுர்மறை துதிப்பவனை

 நிரந்தரமானவனை விக்ன விநாயகனை

சரணடைந்து பிறவா வரம் தர வேண்டி










ஆவதும் அவளாலே ஃ ஃ ஃ






  ஆவதும் அவளாலே ஃ ஃ ஃ 

.........
அன்னையென்னை ஆளாக்கினாள்
காதலி என்னைக் கவியாக்கினாள்
  


மனவியென்னை
 மனிதனாக்கினாள்





சதுர்த்தி விநாயகன்



   
            சதுர்த்தி  விநாயகன் 

                பல்லவி 


    சதுர்த்தி கொண்டாடக் காத்திருக்கும் கரிமுகனை 

    சதுர்முகனை உமைமகனை மனமாரத்துதித்தேன் 


                  அனுபல்லவி 

      சதுர்மறை இதிகாச புராணம் போற்றும் 

      மதுர பூரண மோதகக் கையனை 

                     சரணம்

       எதிலும் எங்கும் நிறைந்திருப்பவனை 

       துதிப்பவர்க்கருளும்  தும்பிமுகப் பெருமானை 

       புதுப் பொலிவுடன் திகழ் மகா கணபதியை 

       கணபதி அக்கிரகாரம் தனிலே 

        
        

                  


Wednesday, 25 June 2014

Kankavar ganapathi





   கண்கவர் கணபதி

      பல்லவி

 வண்ணமயமான  அலங்காரம்  புனைந்த

  கண்கவர் கணபதியை மனமாரத் துதித்தேன்

     அனுபல்லவி

  தண்மதி இளம்பிறை தலையில் சூடிய

  சண்முகன் தமையனை கேசவன் மருகனை

        சரணம்

  புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சிதரும்

  கண்ணியம் நிறைந்தவனைக் காரமர் மேனியனை

  பண்ணிசைத்துப் பாடி பத மலர் பணிந்து

   மண்ணிலினிப் பிறவா வரம் தர வேண்டி

 

      

ஓலை கணபதி


ஓலை  கணபதி 

பல்லவி 

ஓலை  வடிவில் காட்சியளித்திடும் 

ஆனைமுகத்தோனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி  

லீலைகள் பலபுரிந்த கேசவன் மருகனை 

ஆலயங்களனைத்திலுமமர்ந்திருக்கும் கரிமுகனை  

சரணம் 

வேலைப்பிடித்திருக்கும் முருகனின் மூத்தோனை 

காலைத்தூக்கி நின்றாடும் சிவன் மகனை 

நூலெழுத வியாசருக்கு உதவிய கணபதியை 

ஞாலம் போற்றும் ஞானவிநாயகனை 























Tuesday, 24 June 2014


      ரயில் பயணம்


    அருகில் இருக்கையில் பல விதமாய்

     அமர்ந்திருந்தனர்  மனிதர்  பலர்

      இன்னும் சிலபேர் ஆங்காங்கே

       நின்றும் நடந்தும் பயணித்தனர் .

       பேச்சும் கூச்சலும் குறைவின்றி - முழு

        மூச்சுடன்  பெட்டியில் நடந்தேற ,

        மழலையை  மடிவைத்துத் தந்தையரும்

       குழந்தைக்குப்   பாலூட்டுமன்னையரும்

        அவரவர் செயலில்  கவனம் கொள்ள ;

          பெட்டிக்குள் சின்னஞ்சிறு  உலகொன்று

         தானே இயங்கத்துவங்கியது !

         சுமந்து செல்லும்  ரயில் வண்டியும்

          விரைந்து பயணம் தொடங்கியது

          பயணம் செய்யும் மனிதரெல்லாம்

         உறவாய் நட்பாய் சேர்ந்திருந்தார்

         வழியில்  வரும் பல நிறுத்தங்களில்

           இறங்கினர் ஏறினர் பயணியர்கள்

           நெருங்கி நட்பும் உறவுமாக

           ஒருவருக்கொருவர்   பழகிடினும்

           அவரவர் நிறுத்தம் வந்தவுடன்

           இறங்கிச்சென்றனரனைவருமே

           வாழ்க்கையும்  இதுபோலொரு பயணம்


       









     


 

Monday, 23 June 2014




           கிழிந்த காகிதம்

      (   I)
      எனது வாழ்க்கை  மகிழ்ச்சி பொங்கும் இன்ப நாடகம்

       கனவும் நினைவும் கலந்து புனைந்த காதல் காவியம்

      நீயும் நானும் மணம் புரிந்து வாழ்ந்த நாளெல்லாம் 

      மனதில் உன்னை வரைந்து மகிழ்ந்த  இனிய ஓவியம்

       தினமும் கண்டு இன்பம் கொண்ட ஆசை ஆயிரம்

      உனக்கு நானும் எனக்கு நீயும்  என்றிருந்ததும்

      நமக்குப் பிள்ளை பிறந்த போதும் குறைந்ததேயில்லை

      நாளும் நகர்ந்து இளமை குறைந்தும் நம் வாழ்வில் குறைவில்லை

        ஃ ஃ ஃ        ஃ ஃ ஃ      ஃ ஃ ஃ       ஃ ஃ ஃ

       (II)

       ஊரார் உற்றார் வியந்து பார்த்து கண்கள் பட்டதோ

       ஊழ்வினையால் நமக்கு வந்த பாழ்வினைப் பயனோ

        காலனுன்னை பிரித்தெடுத்து  கொண்டு சென்றது

        தனிமை தந்து என்னை நீயும் பிரிந்து சென்றது

        வேகமாக  சோகமென்னை சூழ்ந்து கொண்டது

         பிரிவின் கொடுமை எந்தன் நெஞ்சை  பிழிந்தெடுத்தது

          உனது நினைவு மனதில் தோன்றி  வாட்டி  வதைத்தது

          எனது வாழ்க்கை பறந்து செல்லும் கிழிந்த காகிதம் 










சித்தி   விநாயகன்

பல்லவி

எத்திசையும் புகழ் விளங்கும் சித்திவிநாயகனை

மத்தள வயிறனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

சித்தியும் புத்தியும் அருகிருந்து போற்றும்

உத்தமனைக்கரிமுகனை கேசவன் மருகனை

சரணம்

முத்தமிழும் புகழ்ந்தேத்தும்  முழு முதற் கடவுளை

 ஒத்தைக் கொம்பனை ஆனைமுகத்தோனை

  பித்தன் சிவன் மகனை  பிள்ளையாரப்பனை

    இத்தரை  மீதினி  பிறவாதிருக்க











பசி

        பசி

   சீருடை அணிந்து செல்லும் சிறுவர்கள்

   அறிவுப்பசி தேடிச்செல்ல

  வேறுடை  அணிந்து செல்லும் பிள்ளைகள்

  வயிற்றுப் பசி தீர்க்க

   திசை மாறி ச்செல்கின்றனர் !

       

   

   

ராகிகுட்டா ஆஞ்சநேயர்



 ராகிகுட்டா ஆஞ்சநேயர்

  பல்லவி

பிரசன்ன ஆஞ்சநேயனை  மாருதியை

 ராகிகுட்டா தலத்தில் கண்டு மகிழ்ந்தேன்

 அனுபல்லவி

 அரனரியயன் பணிவாயுகுமாரனை

  அரக்கரை வதைத்த கேசவன் தூதனை

  சரணம் 

  நரர்சுரர் கணபதி ராஜ ராஜேஸ்வரி

  கரம்பணி ந்தேதும் கருணா மூர்த்தியை

 சரணடைந்தோர்க்கருளும்  அஞ்சனை மைந்தனை 

  வரம் தரும் அனுமனைக்கலியுகக்கடவுளை

 

  

Sunday, 22 June 2014

திருமலகிரி லக்ஷ்மி வெங்கடேசன்


  



 திருமலகிரி  லக்ஷ்மி வெங்கடேசன்

   பல்லவி

   ஸ்ரீ லக்ஷ்மி வேங்கடே ச்வரனை

  திருமலகிரியில் மனமாரத் துதித்தேன்

   அனுபல்லவி

    நீலவண்ணனை  யோக  நரசிம்மனை

    கோலமிகு கேசவனை ஞாலமுண்ட வாயனை

   சரணம்

    சீல முடன் கணபதியும் சுகசனகாதியரும்

    ஆலமுண்ட நீலகண்டன் மகா தேவனும்

    பூலோக மாந்தரும் தேவரும் பிரமனும்

    தாள் பணிந்தேத்தும் ஏழு மலையானை 

Sri Meenakshi






ஸ்ரீ சௌந்தர்யா லஹரி  (ஆதிசங்கரர் )


ஸ்ரீ சிவே

  பல்லவி

  உன் கடைக்கண் பார்வையொன்றே போதுமே

   என் குறைகள் அனைத்தும்  நீங்கி யான் கடைத்தேற

    அனுபல்லவி

   கன்னங்கரியவளே  கேசவன் சோதரி

   உன்னையே துதித்தேன்  எனை நீ ஆதரி

  சரணம்

   அன்னையே உன் கண்ணில் கருணையும்  காதலும்

   கண்டேன் சிவனை நோக்குங்கால் இன்னும்

   பரபுருடர் மீது வெறுப்பும்  கண்டேன்

   உன் கீர்த்தியால் நிரம்பும் ஆச்சரியம் கண்டேன்



   உந்தன் சக்களத்தி கங்கையின் மீது

   தாளாத கோபமும் பகையும் கண்டேன்

  பாம்பணியால் பயமும் தாமரையின் செஞ்சிவப்பும்

  எனைக்காணும் விழியில் அருளும் கண்டேன்


     शिवे  शृङ्गारार्द्रा तदितरजने कुल्सनपरा
     सरोषे गंगायां गिरिशचरिते विस्मयवती
     हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजननी
     सखीषु स्मेरा ते मयि जननि दृष्टि: सकरुणा ॥  ५१













YANTRA FOR SLOKA NO.51

SLOKA NO.51:-
"Shivey Shrungaaraardhraa Thaditharajaney Kuthsanaparaa
Saroshaa Gangaayaam Girishacharithey Vismayavathi!
Haraahibhyo Bheethaa Sarasiruhasowbhaagyajananee
Sakheeshusmeraa They Mayi Jananee Drushtihi Sakarunaa!"

Literal Meaning:"O Mother!The expression of Thy look at Shiva is characterised by the sentiment of love; at others with that of dislike, at the co-wife Ganga with that of anger; at the hearing of heroic exploits of Shiva, with that of wonder; at the great serpents forming the ornament of Shiva, with that of dread; at the sight of Thy comrades, with that of light-hearted sympathy characterised by a patronising smile; and at me, a devotee, with that of a compassionate expression. And, besides Thy look that has the red-tinged loveliness of a lotus flower, indicating heroism."
Mode of worship:Yantra to be made on thick sandal paste kept in silver plate or on gold sheet. Sit facing East. Chant this sloka 1008 (1000) times daily for 32 (45) days.
Archana:Chant Lalitha Thrishathi offering vermillion.
Offerings:Cooked rice, black-gram cakes, boiled milk and honey.
BENEFICIAL RESULTS:Enticing people, obtaining Devi's grace and achieving high influence.
Literal Results:The rasas involved in this sloka (fear, disgust, dislike, anger, love, heroism, compassion and wonder) are one less than the navarasas; full lifeof the devotee. A dull, listless life is changed by remarkably eventful life style and high energy levels

   

பிறைசூடிய கணபதி

   
       


   பிறைசூடிய  கணபதி
 

  பல்லவி

இந்தினிளம்  பிறை சூடிய கரிமுகனை

தந்தி முகத்தோனை மனமாரத் துதித்தேன்

துரிதம்

நந்தியும் கணங்களும்  தேவரும் முனிவரும்

சந்திரனும் பிரமனும் இந்திரனும் வணங்கிடும்

அனுபல்லவி

விந்தையாய் லீலைகள் பல புரிந்தவனை 

 கந்தசோதரனைக் கேசவன் மருகனை 

சரணம்

 மந்திரப் பொருளான   சுந்தர வடிவினனை

 வந்திப் பவர்க் கருளளித்திடும் கணபதியை
     
இந்திரியங்கள்  காட்டும் வழி செல்லாமல் 

  சந்ததம்  தடுத்தெனை  ஆண்டருள வேண்டுமென 

Saturday, 21 June 2014

Chandhana vinayakan








சந்தன கணபதி

பல்லவி

 சந்தன கணபதியை  வந்தனை புரிந்தேன்

 அந்தமுமாதியுமில்லாத கரிமுகனை

அனுபல்லவி

உந்திகமலன்  கேசவன் மருகனை

முந்தி விநாயகனை மூவருக்கும் முதல்வனை

சரணம்

நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்

கந்தனும் கதிரோனும் சந்திரனுமிந்திரனும்

சந்ததம் வணங்கிடும் ஆனைமுகத்தோனை

முந்தைய வினைப்பயன்கள் நீங்கிட வேண்டியே









பல்லவி
மகாதேவனை  மாசற்ற சிவனை

அகம் குளிரக்கண்டு மனமாரத்துதித்தேன்

துரிதம்

தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்

முருகனும் கணபதியும் கரம் பணிதேத்தும்

அனுபல்லவி

மகாதேவி பார்வதி உடனிருக்கும்

மகேஸ்வரனைக்  கேசவன் நேசனை

சரணம்

சுகானுபவம் தரும் சூலபாணியை

அகால மரண பயம்தனைப் போக்கும்

மகானுபாவனை சர்வேஸ்வரனை

அகார உகார மகாரப் பொருளை















Friday, 20 June 2014

Thuthikaiyan

 

Ganesha -in-kalika-durgaparameshwari temple, Bengaluru.

துதிக்கையன்

பல்லவி

துதிக்கையன் நீயே துணை புரிவாயே

கதி நீயென்றே மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

மதியணிந்தவனே  கேசவன் மருகனே

 கதிரவனையும் மிஞ்சும் ஒளியுடையவனே

சரணம்

 விதியையும்  மாற்றும்  வலி படைத்தவனே

 துதிப்பவர்க்கருள் தரும் மகா கணபதியே

  இதிகாச வேத புராணங்கள் போற்றும்

அதிசய ஆனைமுகத்தோனே  கரிமுகனே



















ஸ்ரீ மகா திரிபுர சுந்தரி

   

 ஸ்ரீ மகா திரிபுர சுந்தரி  


 பல்லவி

மலை மகளை ஸ்ரீ மகா திரிபுர சுந்தரியை 

தலை வணங்கி கரம் கூப்பி மனமாரத் துதித்தேன் 

அனுபல்லவி 

அலைமகளும் கலை மகளும் அருகிருந்து நேசிக்கும் 

 குலமகளை  ஈஸ்வரியை கேசவன் சோதரியை

சரணம்  

உலகம் போற்றும் உமா  மகேஸ்வரியை 

நலன்களை நல்கிடும் நாம நாராயணியை 

அலகிலா விளையாட்டுடையானின் இடமமர்ந்த 

அலங்கார வல்லியை அகிலாண்டேஸ்வரியை 

Thursday, 19 June 2014

Saathi irantozhiya verillai

 சாதி இரண்டொழிய வேறில்லை

ஃ ஃ ஃ ஃ
ஓதினதாலே  பயனென்ன 


நீதியின் பின் நில்லாமல்

மேதினியில் உயர்ந்தவன்  தாழ்ந்தவனென

பகுத்துண்டு  பார்க்கும்

சாதிக்கு  பிறந்த எவனும் மனிதனல்ல

சாதிக்கப் பிறந்தவனே மனிதன்


Sri makalakshmi








  ஸ்ரீ மகாலக்ஷ்மி

பல்லவி

திருமால் மார்பில்   வீற்றிருக்கும் லக்ஷ்மியை

திருவென்னும்  பெயராளை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

அருங்கலைகள் கல்வி யளித்திடும் கலைமகளும்

 திரு முருகன்  அன்னை மலைமகளும் போற்றும்

சரணம்

அருமறைகள் புகழ்ந்தேத்தும் கேசவன் நாயகியை

 பெருஞ்செல்வம் பேறளிக்கும்  சமுத்திர குமாரியை

அருட்கவியும்  தேவரும்   சுகசனகாதியரும்

குருநாரதரும் நான்முகனும்  வணங்கிடும்










Sri Sri ganapathi




ஸ்ரீ ஸ்ரீ கணபதி 
பல்லவி 

கணபதியைப் பணிந்தேன் கவலைகள் மறந்தேன் 

வணங்கிடுமடியவர் நலன்களைப் பேணும் 

அனுபல்லவி 

கணங்களின் தலைவனை கேசவன் மருகனை 

அணங்குகள் சித்தியும் புத்தியும் மணந்தவனை 

சரணம் 

தணலேந்தும்  நெற்றிக் கண்ணன்  சிவன் மகனை 

மணம் தரும் மலர் மாலை மணிமாலையணிந்தவனை 

குணம் கல்வி செல்வமனைத்தும்  தருபவனை

இணையடி நிழலே துணையெனத்  துணிந்து


























Wednesday, 18 June 2014

Nyaana ganapathi









ஞான கணபதி

பல்லவி

ஞானமூர்த்தியை  பானை வயிற்றோனை

ஆனந்த கணபதியை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

மோனத் தவம் செய்யும் முனிவரும் தேவரும்

ஞானியரும் நந்தியும்  கணங்களும் வணங்கிடும்

சரணம்

ஊனம்களைந்தென்  மன இருள் நீங்கிட

ஞானமளித்திடும்  தீன சரண்யனை

கானக்குழலூதும்  கேசவன் மருகனை

ஆனைமுகத்தோனை  ஆதி விநாயகனை















Tuesday, 17 June 2014

கற்பக விநாயகன்



கற்பக விநாயகன் 


பல்லவி

அளவிலாக் கருணை தரும் மகா கணபதியை

விளக்கேற்றி வைத்து மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

 களவுகள் புரிந்த   கேசவன் மருகனை

 களிறு முகத்தோனைக்  கற்பக விநாயகனை

சரணம்

உளமாரப் பணிந்திடும்  பக்தருக் கெல்லாம்

வளமான வாழ்வளிக்கும் வாரண முகனை 

இளம் பிறை  சூடிடும்  ஆனைமுகத்தோனை 

 தளராதனு தினம் மலர்ப் பதம் பணிந்து 




Vetri ganapathi



வெற்றி  கணபதி

பல்லவி

வெற்றி தரும் வேழ முகத்தோனைக்  கணபதியை

சுற்றிவந்து  நமஸ்கரித்து  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

கற்றிடுமடியவர் புத்தியிலுறை பவனை

கற்பகக் களிரை கேசவன்  மருகனை

சரணம்

நெற்றிக் கண்ணன் மகனைஞான சூரியனை

எற்றிசையும் புகழ் விளங்கும் எளிய கடவுளை

பற்றறுப்பவனை  பரமதயாகரனை

 உற்ற துணையாக நின்று வழிநடத்தும்  கரிமுகனை

















Monday, 16 June 2014

Nishalum nisamum








  நிழலும் நிசமும்

 ஓவியம் போல் நின்று
 காவியம் படைத்திடும்
  தேவியின் அழகும்
   பூவிதழ் வதனமும்
  ஒளி மிகு கண்களும்
  சீரிய நெற்றியும்
  திலகமும் கூந்தலும்
  மலரேந்திய மலர்க்கரமும்
  இள நகை முகமும்
  களிததும்பும் இளமையும்
 நிழற்படமாயென்  நெஞ்சில்
பதித்ததென்  காமிராக் கண்கள
மீண்டும் காணொளிக் காட்சியாய்
கனவில் காண !


    

Sunday, 15 June 2014

     

 அழகு  கணபதி 





   ஃ ஃ ஃ

அழகு கணபதி

 பல்லவி

பட்டாடையுடுத்தி  அணிமணிகள் புனைந்திருக்கும்

கட்டழகு கணபதியை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

 வட்டநிலாப்  பிறையணியும்  வாரண முகனை

  நட்ட நடுக் கடல் கிடக்கும் கேசவன் மருகனை 

 சரணம்

  சுட்டெரிக்கும் சுடரேந்தும் நெற்றிக் கண்ணன் மகனை

  எட்டுகுடி வேலனின் மூத்தோனைக் கரிமுகனை 

 துட்டரை மாய்த்திடும் தும்பிமுகப்பெருமானை 

  இட்டமுடன் பணிந்து  எனையாள வேண்டுமென 

















Saturday, 14 June 2014

பொய்க்கூ கவிதை



குடித்தாலும்  அடித்தாலும்

தந்தை தந்தையே !!


அடித்தாலும் அணைத்தாலும் 

அன்னை அன்னையே!!!



பழித்தாலும் பகைத்தாலும்

நண்பன் நண்பனே,,,,





பிரிந்தாலும் இணைந்தாலும்

காதல் காதலே!!!!














 



விநாயகன்

விநாயகன்

பல்லவி

விநாயகனை வேழமுகத்தோனை
மனமாரத்துதித்து திருவடி பணிந்தேன்

அனுபல்லவி

வினோத வடிவுடைய ஆனை முகத்தோனை
சனாதன தர்ம பரிபாலனனை

சரணம்
அநாத  நாதனை கேசவன் மருகனை 
சுநாத  சங்கீத  ரசிகனைக் கரிமுகனை
கணாதிபனை  காரமர் மேனியனை
கனாவிலும் மறவா மனம் பெற வேண்டி









Father



தந்தை

தந்தையெனும் விந்தைக்குத் தாள் பணிந்தேன்
முந்தைய நாளில் நான் செய்த புண்ணியம்
எந்தையே நீயேன் தந்தையானாய்
வந்தனை செய்து கடவுளை வேண்டினேன்  இனி
வந்திடும் பல பிறப்பிலும் நீயேயென்
தந்தையாய் வந்திட வேண்டுமென்று
தந்தையே மீண்டுமுன் தாள் பணிந்தேன்


Karamar Meniyan




காரமர் மேனியான்

பல்லவி
வாரண முகனை  மகா கணபதியை
ஆரணப் பொருளை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
மாரனையீன்ற  கேசவன் மருகனை
காரணப் பெயர் கொண்ட காரமர் மேனியனை
சரணம்
ஆரம்பம் செய்யும் காரியமனைத்தும்
பூரண நலமுடன் இனிது நடந்திட
ஊரவரனைவரும் முதலில் வணங்கிடும்
தாரணி போற்றும் ஆனைமுகத்தோனை



Friday, 13 June 2014

கவிதை

 பொய்க்கூ  கவிதை

  எதிரில் வந்தது  கவிதை
  புதிராய் நின்றான் கவிஞன்
  சிதறிய சொற்களைக் கோர்க்க மறந்து


தெரிந்ததும் தெரியாததும்

 
         தெரிந்ததும்  தெரியாததும்

         ஃ
      பிரிந்த பின் புரியும்
      நட்பின் மதிப்பு

       இறந்தபின் தெரியும்
       இருந்தவர் பெருமை

       மறந்தால் தெரியும்
       சாவியின்  அருமை

        பசியில் விளங்கும்
        உணவின் தேவை

        வறண்டால் தெரியும்
        நதியின் ஆற்றல்

         தோற்றால் புரியும்
         வெற்றியின்  மேன்மை 

Thursday, 12 June 2014

திருமகள்


              


                      திருமகள் 
                       
                         பல்லவி 

         வாழ்வில் வளம் சேர்க்கும் திருமகளைத் துதித்தேன் 
           
         ஆழியில் துயிலும் கேசவன் மார்பிலுறை 


                      அனுபல்லவி 
          
           சூழ்ந்து நிற்கும் தேவர்களும் முனிவர்களும் நாரதரும் 

           சூழரவணிந்தவனும் நான்முகனும் போற்றும்       

                      சரணம் 

            பாழ் நரகக் குழியாம் பவப்பிணியில் வீழாமல் 

           ஊழ்வினையால் யான்செய்த வினைப்பயன்கள் தொலையவும் 

           தாழ்வுற்று வறுமையில் உழலாமல் தடுத்திடவும் 

            ஏழேழ் பிறவிக்கும் எனைக் காத்தருளவும்  

       
           

அம்மா




அம்மா
ஃ 
அம்மாவென்றழைக்காத சேயில்லையே 
அம்மா நீ இல்லாமல் நானில்லையே 
 பெம்மான் சிவனும் தாயுமானான் அதனால் 
அம்மாவுக்கிணை  உலகில் யாருமில்லை 
 அம்மாவின் அன்புக்கு ஈடில்லையே 
இம்மாயத்தரணியில் தெய்வமும் நீயெனவே 
அம்மா உன் அரவிந்த பதம் பணிந்தேன் 


பொய்க்கூ

   பொய்க்கூ

          வெயிலின் கொடுமை
          நிழலில் தெரியும்


          உறவின் பெருமை
           பிரிவில் தெரியும்

          விதையின்  அருமை
          விளைச்சலில் தெரியும்

          ஒளியின் அழகு
           இருளில் தெரியும்

           


       
            

துணைவரும் கணபதி







துணைவரும் கணபதி 

பல்லவி 

 பணிந்தந்த கணபதியை  மனமாரத்துதிப்பவர்க்கும் 

 வணங்கிடுமனைவருக்கும்  தூணாய்த் துணையிருப்பான்

அனுபல்லவி 

வணிகம் பெருகி வரும் பொய்யான இவ்வுலகில் 

மணிவண்ணன் கேசவன் மருகனைக்  கரிமுகனை 

சரணம் 

பிணியிடர் களைந்திடும்  பவபயம் போக்கிடும்  

குணம் கல்வி செல்வம் அனத்துமளித்திடும் 

இணையொருவர் தனக்கில்லா தும்பிமுகப்  பெருமானை 

தணிகைவளர் திருமுருகன் சோதரனை ஐங்கரனை