ஶ்ரீமகா கணபதி
பல்லவி
பங்கயமலரமர் மகாகணபதியை
சங்கரி மைந்தனை மலர்தூவித் துதித்தேன்
அனுபல்லவி
பங்கயநாபன் கேசவன் மருகனை
சிங்கார வேலன் தமயனைக் கரிமுகனை
சரணம்
திங்கள் பிறையணிந்த மோதகக்கையனை
பொங்கரவணிந்தவனை ஒற்றைக்கொம்பனை
அங்குச பாசமேந்திய அய்ங்கரனை
எங்களைக்காத்தருள வேண்டுமென வணங்கி
No comments:
Post a Comment