திருமழிசை ஜகந்நாதன்
பல்லவி
உலகநாதன் மலரடி பணிந்தேன்
பலரும் போற்றும் திருமழிசைத்திருத்தலத்தில்
அனுபல்லவி
நிலமகள் திருமங்கைவல்லியுடனிருக்கும்
மலர்நாபன் கேசவன் பக்தவத்சலன்
சரணம்
உலகுய்ய வென்றே அவதாரம் எடுத்து
அலகிலா விளையாடல் பல புரிந்தவன்
உளமுருகித்துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
நலங்களை அள்ளி அளித்திடும் தயாபரன்
No comments:
Post a Comment