சென்ன கேசவன்
பல்லவி
பற்றற்ற வாழ்வைப் பற்றிட எனக்கு
உற்றதுணை நீயே சென்ன கேசவா
அனுபல்லவி
முற்றும் துறந்த முனிவரும் நான்மறையும்
பற்றித்துதித்திடும் பாற்கடல் வாசா
சரணம்
உற்றார் சுற்றமும் இவ்வுலக வாழ்வும்
வெற்றியும் செல்வமும் எதுவும் சதமல்ல
கற்றறிந்தோர் போற்றும் தேவன் நீ ஒருவன்
மட்டுமே சதமென அறிந்த பின்னாலே
No comments:
Post a Comment