பரவாசுதேவன்
பல்லவி
பரகதி பெறவே உனயன்றி யார் துணை
பரவாசுதேவனே பரிந்தருள் புரிவாய்
அனுபல்லவி
அரனயனமரர் சுகசனகாதியர்
கரம் பணிந்தேத்தும் மாலே கேசவா
சரணம்
அரக்கர் குலமழித்த ஆதிமூலமே
பரிசுத்தமான வேதங்கள் போற்றும்
பரந்தாமனே பாற்கடல் வாசனே
சரணடைந்தவர்க்கு நலமளிப்பவனே
No comments:
Post a Comment