அந்த வேளையே ஆனந்தம் கேசவா
பல்லவி
அந்த வேளையே ஆனந்தம் கேசவா
உந்தன் பதமலரை நினைந்துருகிப் பாடிடும்
அனுபல்லவி
சந்ததம் உனது சந்நிதியில் நின்று
எந்தன் கவலைகளை மறந்துனைத் துதித்திடும்
சரணம்
பந்தபாசத்தளைகளைக் களைந்து
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
எந்தையே உனதிரு திருவடிச்சரண்களை
புந்தியில் வைத்து போற்றிப் பணிந்திடும்
No comments:
Post a Comment