திருவிண்ணகர் உப்பிலியப்பன்
பல்லவி
எப்படி அழைத்தால் நீ வருவாயோ
அப்பனே கேசவா எனக்கருள்வாயே
அனுபல்லவி
உப்பிலியப்பனே விண்ணகர் வேந்தனே
இப்பிறப்பிலெனைக் காக்கும் ஈசனே
சரணம்
முப்புரமெரித்த சிவனும் பிரமனும்
இப்பிரபஞ்ச மாந்தரும் தேவரும்
முப்போதும் பணிந்திடும் தேவாதிதேவனே
ஒப்புயர்வில்லா ஆராவமுதே
No comments:
Post a Comment