காமாக்ஷி
பல்லவி
ஆனந்தமே தரும் உந்தன் தரிசனம்
தேனுந்தன் கடைக்கண் விழியருள் காமாக்ஷி
அனுபல்லவி
தானந்தமில்லாத கேசவன் சோதரி
ஏனிந்தப் பாராமுகம் ஏழையெனக்கருள
சரணம்
வானுறை தேவரும் மூவரும் இந்திரனும்
மோனத்தவம் செய்யும் முனிவரும் வழிபடும்
ஆனந்தமான வடிவுடையவளே
தீனதயாபரி சங்கரி கௌரி
No comments:
Post a Comment