ஶ்ரீவாசுதேவன்
பல்லவி
ஶ்ரீவாசுதேவனை கேசவனைப் பணிந்தேன்
மூவாசைப்பிணி போக முன்வினைப் பயன் நீங்க
அனுபல்லவி
தேவாதி தேவனை மாயக் கண்ணனை
தேவியர் பாமா ருக்மிணி உடனிருக்கும்
சரணம்
ஆவினங்கள் மேய்க்கும் நந்தகுமாரனை
மூவடி மண் கேட்டு மாவலியை வென்றவனை
தேவகி மைந்தனை பாலகோபலனை
நாவினால் பாடி மனமாரத்துதித்து
No comments:
Post a Comment