அந்த நாளே நல்ல நாள்
பல்லவி
அந்த நாளே நல்ல நாள்
நந்தகுமாரனுன் லீலைகளைப் பாடும்
அனுபல்லவி
சந்ததம் கேசவா என்றுனை அழைத்து
சிந்தையில் வைத்துன் சீரடி போற்றும்
சரணம்
நிந்தனை செய்யும் நீச அரக்கருக்கும்
வந்தனை புரிந்திடும் நரர்சுரரனைவருக்கும்
உந்தன் தயவளிக்கும் தீனசரண்யனே
முந்தைய வினப்பயன் நீங்கிட எனக்கருளும்
No comments:
Post a Comment