காஞ்சி வரதன்
பல்லவி
நிலம் நீர் நெருப்பு காற்று விசும்பென
உலகனைத்துமாய் நின்ற வரதனைத் துதித்தேன்
அனுபல்லவி
விலங்கு மனத்தினை அடக்கிட உதவிடும்
பலம்தனை அளித்திடும் மாயனைக்கேசவனை
சரணம்
உலகினை விடவும் பெரிதானவனை
அலகிலா விளையாடல் பல புரிந்தவனை
நலமனைத்தும் அளிக்கும் பேரருளாளனை
தலங்களுள் சிறந்த காஞ்சியில் பணிந்தேன்
No comments:
Post a Comment