ஆதிகேசவா
பல்லவி
எந்த நேரமும் உந்தன் சந்நிதியில்
வந்து துதித்திடும் வரமருள வேண்டினேன்
அனுபல்லவி
தந்தையும் தாயும் பந்துவும் தோழனும்
எந்தனுக்கென்றும் நீயே மாதவா
சரணம்
வந்தனை புரிந்திடும் அடியவர்க்கெல்லாம்
சந்ததம் அருள் தரும் தீனசரண்யனே
முந்தைய பழவினைப் பயன்களைக்களைந்து
எந்தனை ஆண்டருள் ஆதிகேசவா
No comments:
Post a Comment