கோவிந்தா சரணம்
பல்லவி
சரணம் சரணம் கோவிந்தா சரணம்
மரணம் பிறப்பெனும் மாயையகல உந்தன்
அனுபல்லவி
சுரபதி ரதிபதி சரச்வதியின் பதி
நரர்சுரர் நாரதர் பணிந்திடும் கேசவா
சரணம்
சிறிய வயதில் பல பிழைகள் தீமைகள்
அறியாமல் புரிந்தேன் பெரியோனாயினபின்
பிறர்க்கென்றே திரிந்தேன் அரியே வேங்கடவா
வறியவன் உனதருளால் உனையே சரணடைந்தேன்
No comments:
Post a Comment